Report of Nothern Public Consultation on Draft Bill of Independent Council of News Media Standards.

  • இணைய பதிவு என்பது இலங்கையினில் பதிவு செய்யப்படுவது என்பதனை தாண்டி இலங்கையினில் பார்வையிடக்கூடிய இணையங்கள் அனைத்து தொடர்பினில் நடவடிக்கை என அமைய வேண்டும்
  • தேசிய பாதுகாப்பு தொடர்பினில் வரைவிலக்கணம் செய்யப்படவேண்டும்.உதாரணமாக அரசு தேசிய பாதுகாப்பு எனக்கூறிக்கொண்டு பொருளாதார விடயங்களினை கூட பிரஸ்தாபிக்கலாம்.அதனால் தேசிய பாதுகாப்பு என எதனை வரையறை செய்கின்றனரென்பது முக்கியம்.
  • அரசியல் தரப்பினர் ஊடக பணிகளினில் தலையிடுவது மற்றும் குற்றம் சாட்டி நீதிமன்ற நடவடிக்கைகளினில் ஈடுபடுவது போன்றவற்றிலிருந்தான பாதுகாப்பு தொடர்பினில் வரையறுக்கப்படவேண்டும்.
  • ஊடகங்களது சுயாதீன தன்மை உறுதிப்படுத்தப்படவேண்டும்.
  • .சிங்கள மற்றும் தமிழ் ஊடகங்கள் இரண்டு தரப்புமே ஏனைய இனச்செய்திகளிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.இன நல்லிணக்கத்தை தோற்றுவிக்க பரஸ்பரம் இரு இன செய்திகளிற்கும் முக்கியத்துவம் தரக்கூடியதான அறிக்கையிடல் மேற்கொள்ள பொறிமுறை உருவாக்கப்படவேண்டும்.
  • ஊடகவியலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளினில் ஈடுபட தனியார் ஊடக நிறுவனங்கள் தடைவிதிக்கின்றன.ஊடகவியலாளர்கள் தமது உரிமைகளிற்காக குரல்கொடுப்பதற்காக ஊடக தொழிற்சங்கங்களினில் இணைவதற்கான அனுமதி
  • சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அனுமதியை கொண்டிருத்தல் வேண்டும்.தாமதித்து ஊடகங்களிடமிருந்து பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைப்பதை தவிர்க்கவேண்டும்.
  • ஊடகங்களிற்கு பதிலளிப்பதற்கான சந்தர்ப்பங்கள் காலக்கெடுவுடன் வழங்கப்படவேண்டும்
  • இன ,மத எல்லையினை தாண்டி ஊடகங்கள் அனைத்து தரப்பும் தமது கருத்துக்களினை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவேண்டும்.
  • பெண்கள் மற்றும் சிறார்கள் தொடர்பிலான செய்தி அறிக்கையிடல்கள் தொடர்பினில் கட்டுப்பாடுகள்,வரையறைகள் ஏற்படுத்தப்படுதல் வேண்டும்.
  • சமூக ஊடகங்கள் தனிநபர் சுயகௌரவத்தினை பாதிக்க வைக்கும் அறிக்கையிடல்களினில் ஈடுபடுமிடத்து பாதிக்கப்பட்ட தரப்புக்கள் நீதி கிடைப்பதற்கான பொறிமுறை
  • இணைய ஊடகங்களினை கட்டுப்படுத்துவதற்கான கூடிய சட்டங்கள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்படவேண்டும்.அவற்றினை பதிவு செய்வதில் கட்டுப்பாடுகள் பேணப்படவேண்டும்.
  • ஊடகமொன்றினால் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் நீதியை பெற்றுக்கொள்ளவும் மானநஸ்டம் பெற்றுக்கொள்ளவும் வழிசமைக்கப்படவேண்டும்.
  • தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினில் உள்ள கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு ஊடகவியலாளர்கள் தகவல்களை சுதந்திரமாக பெற்றுக்கொள்ள வழிசமைக்கப்படவேண்டும்.
  • ஊடகங்களினில் வெளியாகும் விளம்பரங்களிற்கு ஆசிரியர் பொறுப்பாகமாட்டார்கள் என்பதுடன் அதனை நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்.
  • செய்திகளிற்கான மூலங்களிற்கான பாதுகாப்பு மீள உறுதிப்படுத்தப்படவேண்டும்.
  • ஊடக செய்திகளினால் பாதிக்கப்படுபவர்கள் நீதியை விரைந்து பெற்றுக்கொள்ளவும் அதற்கு ஊடக நிறுவனம் பொறுப்பேற்பது கட்டாயப்படுத்தப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
  • ஏற்கனவே அமுலில் உள்ள பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு கலைக்கப்படவேண்டும்.
  • பத்திரிகை ஆசிரியர் பேரவையுடன் கலந்துரையாடி யாப்பு வரையறுக்கப்படவேண்டும்.
  • சிங்கள ஊடகங்கள் தமிழ் தரப்புக்களிறகான பொறுப்புக்கூறலை தட்டிக்கழிக்கின்றன.அரசிடமும் கேள்வி கேட்க தமிழ் ஊடகங்களிற்கு சந்தர்ப்பமற்ற பக்கச்சார்பு நிலை
  • அரசியல் சாசனம் போன்று கண்துடைப்பாக இல்லாது நீதியானதாக ஊடக தரநிர்ணயங்களுக்கான சுயாதீனப்பேரவை சட்டம் இருக்கவேண்டும்.
  • பெண்கள் மற்றும் பாதிக்கப்படும் சிறார்களது பெற்றோர் நீதியை பெற்றுக்கொள்வதற்கான சுலபமான நீதி முறைமை உருவாக்கப்படவேண்டும்.
  • ஊடக ஒழுக்க நெறிகள் பற்றிய எழுத்துமூமாகவேனும் ஆவணப்படுத்தப்பட்டோ சட்டமூலமாகவோ இருந்தால் மட்டுமே ஒருவித மரியாதையுடன் அவை அமுல்படுத்தப்படுவதுடன் ஊடகவியலாளர்களும் பணியாற்றுவர்.
  • ஊடகங்களால் பாதிக்கப்படும் மக்கள் நீதியை பெற்றுக்கொள்ள ஏதுவாக சுலபமான விளக்கம்.
  • ஊடகவியலாளர்கள் பக்கசார்பற்று தகவல்களை பெற்றுக்கொள்வது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் நிச்சயமாக்கப்படவேண்டும்.

More Works